Monday, August 8, 2011

எனது மூலிகைப் பயணம்...

முதன் முதலாய் நான் மூலிகைகளைப் பற்றி அறிய ஆவலானதொரு கதை...

அப்பா சித்த மருத்துவர். அதனால எல்லா மூலிகைகளையுமே எனக்கு முதலில் பொடியாகத்தான்தெரியும். இந்தப் பொடிகளோட இலைகளை நான் பார்க்கணும்னு சொல்லிட்டே இருப்பேன். அப்போதான் ஒரு மூலிகைப் பண்ணையோட விலாசத்தைக் கையில குடுத்து அங்க போயி பார்த்துட்டு வான்னு சொல்லிட்டார். இதை நான் எதிர்பார்க்கல. காரிப்பட்டி BBS மூலிகைப் பண்ணை. காரிப்பட்டில இறங்கி ரெண்டு கிலோ மீட்டர் நடந்து போகணும். அங்க கிட்டத் தட்ட 2000 மூலிகைச் செடிகள், மரங்கள், பழமரங்கள் மற்றும் பழமையான மரங்களும் இருக்கும். அங்க நான் முதலில் பார்த்து அதிசயத்த மூலிகை சிவன் வணங்கி. தொழுகண்ணினும் சொல்லுவாங்க. அழகா ரெண்டு கைய கூப்பி வணங்கறது போலயே இருக்கும். இப்படியே ஒவ்வொரு மூலிகைகளையும், செடிகளையும், மரங்களையும் பார்த்து நான் மெய் மறந்து நின்னேன்னுதான் சொல்லணும்.
அங்க ரெண்டு நாள் இருந்து பார்த்துட்டு வந்தபின் ஆவல் அதிகமாயிருச்சு. ஒருரொரு மூலிகைகளைப் பத்தியும் விரிவாப் படிக்கணும்னு ஆவல். அதுக்கு உதவியா இருந்தது மருத்துவர் திரு சேட்டு அவர்கள். அவர் மூலமா மருத்துவர் திரு. துரைசாமி அவர்கள் அறிமுகமானார். அவர்கிட்ட மூலிகைகள் பத்திப் படிக்கணும்னு சொன்னதுமே திருமூர்த்தி மலைல ஒரு வகுப்பு நடக்குது அங்க போயி படிக்க முடியுமான்னு கேட்டார். நானும் சரின்னு சொல்லி அடுத்தகட்டப் பயணமா திருமூர்த்தி மலைக்கு கிளம்பிட்டேன்.
அது ஒரு வருடப் பயிற்சி வகுப்பு... மாசத்துல மூணுநாள் அங்கேயே தங்கிப் படிக்கணும். மூலிகை, சூரணம், லேகியம், தைலம் தயாரித்தல், மண் குளியல், வாழை இலைக்குளியல், தடவு முறை(மசாஜ்)எல்லாம் படிச்சேன். அதன் பிறகு தக்கலை, சித்த்ர்கோயில், கொல்லிமலை இப்படி ஊர் ஊராப் போயி மூலிகைகளைப் படிச்சேன்.

நான் படிச்சத உங்களோட பகிர்ந்துக்கறேன்... கூடுதல் தகவல் இருந்தால் கண்டிப்பா சொல்லுங்க.

3 comments:

  1. எல்லாப் பதிவுகளும் அருமை, பயணியுங்கள்;பின் தொடர்கிறோம்.

    ReplyDelete
  2. நன்றி அரபுத்தமிழன்... வாசித்தலோடு நின்று விடாதீர்கள். கொஞ்சம் மூலிகைகளின் வாசத்தை சுவாசிக்கவும் முயலவும்.

    ReplyDelete
  3. எல்லாப் பதிவுகளும் அருமை

    ReplyDelete