இனியவளே...


என் இருகண்ணில் ஒளிவீசும்
கண்மணியும் நீதான்...

என் கவிதைக்குப் பொருள்தந்த
கருமணியும் நீதான்...

என் எண்ணத்தில் எழுந்த
ஜனனமும் நீதான்...

என் கற்பனையைக் கலைத்த
மரணமும் நீதான்...

என் மனதில் மயங்கும்
மல்லிப் பூவும் நீதான்...

என் நெஞ்சத்தில் நெருடும்
கள்ளிப் பூவும் நீதான்...

இனியவளே என்று
சொன்னவனும் நீதான் - நீயில்லை


இனி அவள் தான் என்று
சொல்பவனும் நீதான்...!