3. வெந்தயம்
(தாவரவியல் பெயர் : Trigonella foenum graecum)
இது கீரை வகையைச் சேர்ந்தது. இலைகளும் விதைகளும் மருத்துவப் பயனுள்ளது. வெந்தயத்த காரக்குழம்பு, ஊறுகாய்க்கு அவசியம் பயன் படுத்துவாங்க. கீரையக் கூட்டா செஞ்சு சாப்பிட்டா உடலுக்கு நல்ல குளிர்ச்சியத் தரும்.
1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.
2. வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்.
3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.
4. கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
5. வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.
6. 5 கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.
7. வெந்தயம், கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.
8. வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலி, பொருமல், ஈரல வீக்கம் குறையும்.
9. வெந்தயம், வாதுமைப் பருப்பு, கசகசா, உடைத்த கோதுமை, நெய், பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும், வலுவாவும் இருக்கும். இடுப்பு வலி தீரும்.
10. வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.
11. வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.
அருமையான பதிவு. இந்த வெந்தயம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதை அப்படியே சில நேரங்களில் வாயில் ஊற வைத்தும் சாப்பிடுவதுண்டு. அதனால் எதேனும் பலனுண்டா ...?
ReplyDeleteநிறையவே பலனுண்டு. வெந்தயத்தில் இரும்புச்சத்து அதிகம். இதய நோய் குறைக்கும். தினமும் அரை ஸ்பூன் பொடி செய்து மோருடன் கலந்து சாப்பிட வயோதிகர் கூட வாலிபராக செயல்படலான்னு சொல்லிருக்காங்க. தோல் பளபளப்பா இருக்கும். முகம் நல்ல பொலிவா இருக்கும். சர்க்கரைக்கும் நல்ல மருந்து. இரவில் இளநீர்ல ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஊற வச்சு காலைல சாப்பிடச் சூடு தணியும்.
Deleteஉங்கள் பதிவில் பின்னூட்டம் இடுவது சற்று சிரமமாக இருக்கிறது. அருமையான பதிவு தான். இரண்டு முறை எழுதியும் “ வோர்ட் வெரிபிகேஷன் கேட்டு தொல்லைப் பண்ணி என் பின்னூட்டத்தை அழித்துவிட்டது. அந்த word verification ஐ எடுத்து விடுங்கள்.
ReplyDeleteஇந்த word verification ஐ எங்க போயி எடுக்கணும்? எனக்குத் தெரியல, சொல்ல முடியுமா? அப்படியே செய்யறேன்..
Delete