Wednesday, November 23, 2011

40. தினம் ஒரு மூலிகை ஓரிதழ் தாமரை.

( தாவரவியல் பெயர் : Hybanthus enneaspermus )

ஓரிதழ்த் தாமரையின் உற்ற குணத்தைக் கேளாய்

மார்பில் இல்லாத மங்கையர்க்கு மோரில்

குடிக்கப்பால் உண்டாகும் கோர மேகத்தை

படிக்குள் இருக்கா தொழிக்கும் பார்.

மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிவப்பு நிறமுள்ள ஒரே இதழுடைய மலர்களையும் உடைய குறுஞ்செடி. செடியின் எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.

தாது வெப்பகற்றியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

1. இலையை நாள்தோறும் விடிவதற்கு முன் சிறிதளவு மென்று தின்று, பால் அருந்திவர ஒரு மண்டலத்தில் (48 நாட்களில்) தாது இழப்பு, அதிமூத்திரம்,வெள்ளை, வெட்டைச்சூடு, நீர் எரிச்சல், சிற்றின்பப் பலவீனம் ஆகியவை தீரும்.

2. ஓரிதழ் தாமரை இலை, கீழா நெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை மூன்றையும் ஒரு பிடி அளவு அரைத்து 200 மி.லி. எருமைத் தயிரில் 10 நாட்கள் சாப்பிட நீர்த்தாரை ரணம், வெள்ளை ஆகியவை தீரும். ( மருந்து சாப்பிட்ட பின் காரமும், சூடும் இல்லாத உணவு சாப்பிட வேண்டும்.)


5 comments:

  1. நல்ல பயனுள்ள பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. நன்றி ஐயா...

    தொடர்ந்து வாசித்து எனது நிறை, குறைகளைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்...

    ReplyDelete
  3. ஓரிதழ் தாமரை வேண்டுவோர் இந்த மெயிலில் தொடர்பு கொண்டால் செடியாக கிடைக்கும்

    என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் தொடர்புக்கு :
    (If anyone needs this herbal plant please contact)

    hybanthus.enneaspermus@gmail.com
    http://hybanthus-enneaspermus.blogspot.com/

    ReplyDelete
  4. ஒரித்ல் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் பச்சை செடியாகவும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123 ....

    ReplyDelete